தமிழ்நாட்டில் ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து தமிழ்நாடு அரசு வரும் 14 ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறது.
கொரோனா தொற்று பரவல் காரமாக மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் கடந்த ஒன்றாம் தேதி முதல் திறக்கப்பட்டன. முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல தமிழ்நாடு முழுவதும் இருக்கும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளியை திறக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் வருகிற செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அப்போது மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்வார். ஏற்கெனவே 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.