செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சுகாதாரத்துறை, பள்ளி மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது.
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. முதற்கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. இதே போல், கல்லூரிகளும் வருகிற ஒன்றாம் தேதி முதல் திறக்கப்பட இருக்கின்றன. இந்த நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிப்பது குறித்தும், முன்னேற்பாடுகள் குறித்தும், சுகாதாரத்துறை, பள்ளி மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. செப்டம்பர் 15ம் தேதிக்குப் பின், பிற வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post