மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுவதையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சபரிமலை ஐய்யப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை 1ஆம் தேதியான நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 60 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதையொட்டி, சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால், கடந்த ஆண்டு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த தீர்ப்புக்கு தடை விதிக்க மீண்டும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனவே, இந்த ஆண்டும் அங்கு தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்கள் தரிசனத்துக்கு இதுவரை 136 பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், சபரிமலையில் போராட்டங்கள் நடைபெறாமல் தடுக்கவும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் பலத்தை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.