நெல்லை மாவட்டத்தில் ராமராஜ் காட்டனின் புதிய விற்பனை நிலையம் திறப்பு விழா

நெல்லை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டையில் ராமராஜ் காட்டனின் புதிய விற்பனை நிலைய திறப்பு விழா நடைபெற்றது.

வெண்மை நிற பருத்தி ஆடை வடிவமைப்பில் முதன்மை பெற்று 2018, 19 ஆம் ஆண்டில் இந்திய அளவில் முதன்மை பெற்று சாதனை படைத்துள்ள ராம்ராஜ் காட்டனின் புதிய விற்பனை நிலையம், நெல்லை மாவட்ட வண்ணாரப்பேட்டை, செல்லப்பாண்டி மேம்பாலம் அருகில் திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விற்பனை நிலையத்தினை சுதர்சன் மருத்துவமனை அதிபர், மருத்துவர் சிவராமகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். முதல் விற்பனையை செய்யது குழுமத்தின் தலைவர் சையது நிவாஸ் துவக்கி வைத்தார், முதல் விற்பனையை தி ப்ரொபஷனல் கொரியர் அதிபர் மேகலிங்கம் பெற்றுக் கொண்டார். தமிழகம் மட்டும் அல்லாது பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ராம்ராஜ் காட்டன் வேஷ்டி, சர்ட்கள், அமோகமாக விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version