வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்கத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

வைணவக் கோயில்களின் முக்கியத் திருவிழாவான வைகுண்ட ஏகாதசி, இன்று அதிகாலை தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு வைணவத் தலங்களில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில், நேற்றில் இருந்தே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணிக்கு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று மதியம் முதல் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், பக்தி பரவசத்தோடு சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு, காலை 9 மணிக்குத் தங்கத் தேரோட்டம் தொடங்கியது. உற்சவர் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, திரு ஆபரணங்கள் அணிந்து, தங்கத் தேரில் எழுந்தருளினார். பக்தர்களின் பக்தி முழக்கம், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்கு நடுவே நான்கு மாட வீதிகளில், உற்சவர் தங்கத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

Exit mobile version