தொண்டு நிறுவனம் சார்பில் கணினி ஆய்வகம் திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், நடப்பாண்டில் மேலும் 100 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆற்காட் தொண்டு நிறுவனம் சார்பில் கணினி ஆய்வகம் திறக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர், பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கினார். அப்போது மாணவர்களிடையே பேசிய அவர், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு எண்ணற்ற திட்டங்களையும் கல்வி உபகரணங்களையும் வழங்கி வருவதாகவும், அதேபோல தொண்டு நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பு மூலமாக கையடக்க கணினிகள் குழந்தைகளுக்கு வழங்குவது மூலம் அவர்களின் அறிவுத் திறன் மேம்படுகிறது என்று கூறினார்.

Exit mobile version