நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடில் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடி மற்றும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பேறுகாலத்திற்கு பின் கவனிப்பு பிரிவின் கூடுதல் கட்டிடத்தை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பாக, திருச்செங்கோடு நகராட்சிப் பகுதியில் 6 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றின் தொடக்க விழா கூட்டப்பள்ளி பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் பங்கேற்று அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடியை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பேறுகாலத்திற்கு பிறகான கவனிப்பு பிரிவிற்காக 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தினை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.