வேலூர் சந்தைப்பேட்டையில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டையில், அதிமுக தேர்தல் அலுவலகத்தை மின்துறை அமைச்சர் தங்கமணி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்

தேர்தல் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி வீரமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோரும் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து சந்தைப்பேட்டை, நெல்லூர்பேட்டை, காமாட்சியம்மன் பேட்டை பகுதிகளில் வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்டனர். அமைச்சர்களை அதிமுக தொண்டர்கள், பெண்கள் வாத்தியங்கள் முழங்க ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதிமுக அரசின் சாதனைகளை விளக்கும் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்து பிரசாரம் மேற்கொண்டனர். இதேபோல் தேவரிஷிகுப்பம், செண்டத்தூர், சேத்துவண்டை பகுதிகளில் அமைச்சர் பாண்டியராஜன் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Exit mobile version