பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் உள்ள சுந்தராபுரம் பகுதியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.
பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக மகேந்திரன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், பொள்ளாச்சி தொகுதியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வேட்பாளரை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில், சுந்தராபுரம் பகுதியில் அதிமுக தேர்தல் அலுவலகத்தினை அவர் திறந்து வைத்தார், அப்போது பேசிய அவர், கோவை பகுதிக்கு 50 ஆண்டுகளுக்கு தேவையான வளர்ச்சியை அரசு கொடுத்துள்ளதாகவும், மேலும் பல வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்