விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகத்தை, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
பள்ளித்தென்னலில் கால்நடை துறை சார்பில் 10 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை மருந்தக கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு, புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, 99 லட்சம் ரூபாய் மதிபீட்டில் 4 ஆயிரத்து 850 பெண்களுக்கு ஊரக கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் தலா 25 கோழி குஞ்சுகளையும் அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, முத்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரூ.10.75 லட்சம் மதிப்பில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகம் திறப்பு!
