வீராணம் ஏரியில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறப்பு

வீராணம் ஏரிக்கு வினாடிக்கு ஐந்நூறு கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அமைந்துள்ளது வீராணம் ஏரி. கோடை காலத்தின் அதிக வெப்பம் காரணமாக ஏரியில் 39 அடிக்குமேல் தண்ணீர் குறைந்துள்ளது, இதனால் ஏரியிலிருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது, தற்போது ஏரியில் 45.45 அடி தண்ணீர் இருப்பு உள்ள நிலையில், சென்னைக்கு 40 அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது, இதனால் வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து குறைந்த அளவு தண்ணீர் திறக்க அதிகாரிகள் தீர்மானித்தனர். அதன்படி, வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஏரியில் ஒரே அளவு தண்ணீர் 39 அடிக்கு குறையாமல் இருப்பில் இருக்க பராமரிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version