அரியலூர் மாவட்டத்தில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 3 புதிய துணை சுகாதார நிலையக் கட்டடங்களை, அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்தார்.
வாலாஜாநகரம், விளாங்குடி மற்றும் புதுப்பாளையம் ஆகிய கிராமங்களில் புதிய துணை சுகாதார நிலையக் கட்டடங்களை, அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்தார்.
30 லட்சம் ரூபாய் வீதம், மூன்று கட்டடங்கள் 90 லட்சத்தில் கட்டப்பட்டது. இந்த மூன்று கட்டடங்களும், முதலமைச்சர் உத்தரவின் பேரில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த துணை சுகாதார நிலையங்களில், செவிலியர் அறை, தொற்றா நோய் பரிசோதனை அறை, கர்ப்பிணிப் பெண்களுக்கான பரிசோதனை அறை ஆகியவற்றுடன் கூடிய புதிய சுகாதார நிலைய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ரத்னா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊராட்சிக் குழுத் தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.