இந்தியாவிலேயே முதல்முறையாக திறந்தவெளி நூலகம் திருச்சியில் திறப்பு

நூல்களை வாசிக்கும் பழக்கத்தை அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் ஏற்படுத்தும் வகையில், 2 ஆயிரம் புத்தகங்களுடன் இந்தியாவிலேயே முதல்முறையாக திறந்தவெளி நூலகம் திருச்சியில் திறக்கப்பட்டுள்ளது.

புத்தகங்களை தேடிச் சென்ற காலம் மாறி, கையிலேயே நூலகம் என்ற அளவில் தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனாலும், நூலகத்துக்குச் சென்று புத்தகத்தை வாசிக்கும் திருப்தி இணையவழியில் இருப்பதில்லை. எனவே, நூல்களை வாசிக்கும் பழக்கத்தை இளைஞர்களிடம் மட்டுமல்லாது, அனைத்துத் தரப்பினரிடமும் கொண்டு செல்லும் வகையில், புதிய திட்டத்தை திருச்சி மாநகராட்சி செயல் படுத்தியுள்ளது.

திருச்சி, புத்தூர் ஆபீசர்ஸ் காலணி பகுதியில 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திறந்தவெளி நூலகத்தை அமைத்துள்ளது. இதனை தேசிய பசுமை தீர்ப்பாய தென் மண்டல தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி, தமிழக முதன்மை செயலர் ஹர்மந்தர் சிங் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.

Exit mobile version