எகிப்து நாட்டின் பிரமிடு பொதுமக்களின் பார்வைக்காக திறப்பு

எகிப்து நாட்டில் நான்காயிரத்து 600 ஆண்டுகள் பழமையான, மன்னர் ஸ்னெஃபுரூவின் வளைந்த பிரமிடு, பொதுமக்கள் பார்வைக்காக அரசால் திறந்துவைக்கப்பட்டது.

எகிப்து நாட்டின் , கிசா பகுதியிலுள்ள தஷூரில் ஸ்னெஃபுரூ மன்னரின் வளைந்த பிரமிடு உள்ளது. வளைந்து காணப்படும் இதன் வடிவத்தால்தான் இந்த பிரமிடு இப்பெயர் பெற்றது.சுமார் 101 மீட்டர் உயரம் கொண்ட இந்த பிரமிடு, பாலைவன மட்டத்திலிருந்து 58 டிகிரி சாய்வு உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரமிடில் வடக்குப்புறம் மற்றும் தெற்குப்புறமாக இரண்டு வாயில்கள் உள்ளன. இதில் வடக்குப்புறமாக உள்ள வாயில்தான் பொதுமக்கள் பார்வைக்காக, தற்போது திறக்கப்பட்டுள்ளது. எகிப்து மன்னர் ஸ்னெஃபுரூ கட்டி எழுப்பிய இந்த பிரமிடு கி.மு2 ஆயிரத்து 600 ஐ சேர்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். எகிப்தின் நான்காம் பேரரசை நிறுவிய மன்னர் ஸ்னெஃபுரூ இதேபோல மூன்று பிரமிடுகளை, தஷூர் பகுதியில் நிறுவியுள்ளார். இவற்றை யுனெஸ்கோ, தன் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இணைத்துள்ளது. இந்த வளைந்த பிரமிடுக்குள் மன்னர் ஸ்னெஃபுரூ புதைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version