சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 12-ம் தேதி நடை திறப்பு

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 12-ம்தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் தவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் மற்றும் விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், கோவில் நடை திறக்கப்பட்டு, பூஜை, வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அப்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, வருகிற 12-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. பக்தர்களின் தரிசனத்திற்குப் பின், இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். மறுநாள் 13-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், 17-ந் தேதி இரவு 10.30 மணிக்கு அத்தாழ பூஜைக்கு பின் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, கோவில் நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version