மண்டல பூஜையை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோயிலில், மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் முன்னிலையில், தந்திரிகளின் பூஜையுடன் நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜைக்காக திறக்கப்பட்ட நடை, சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, இரவு அடைக்கப்படும். பின்னர், ஞாயிறு காலை கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். நடை திறக்கப்பட்டதை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர். இதையொட்டியும், மண்டல பூஜை தொடங்குவதை முன்னிட்டும், சன்னிதானம், பம்பை, நிலக்கல் பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.