இந்தியாவிலேயே முதன் முறையாக புற்றுநோயை குணப்படுத்தும் அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சை மையத்தை, ஓமந்தூரார் மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.
தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புற்றுநோயை குணப்படுத்தும் அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சை மையம் செயல்படுத்தப்பட இருக்கிறது. முதற்கட்டமாக சென்னையில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.
இதனை தொடர்ந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கதிர்வீச்சு சிகிச்சை மையத்தை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைக்கிறார். இதில், 6 கோடி ரூபாய் மதிப்பிலான கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை வளாகத்தையும், 22 கோடி ரூபாய் மதிப்பிலான லீனியர் ஆக்சிலேட்டர் கருவி மற்றும் சி. டி. சிமுலேட்டர் கருவிகளையும் முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட அமைச்சர் பெருமக்களும் கலந்து கொள்கின்றனர்.