காவிரி டெல்டா பாசன வசதிக்காக கல்லணை நாளை திறப்பு

காவிரி டெல்டா மாவட்ட பாசன வசதிக்காக கல்லணை நாளை காலை திறக்கப்படுகிறது.

டெல்டா மாவட்ட பாசன விவசாயத்திற்காக கடந்த 13ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மேட்டூர் அணையை திறந்து வைத்தார். இந்நிலையில் திறக்கப்பட்ட தண்ணீர், முக்கொம்பு வந்தடைந்து அங்கிருந்து திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்றிரவு காவிரி நீர் கல்லணைக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து தஞ்சை,திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, காரைக்கால், உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட பாசன விவசாயத்திற்காக நாளை கல்லணை திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தஞ்சை மாவட்டம் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. பாசன வசதிக்காக திறக்கப்படக்கூடிய தண்ணீரால் 12 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடிக்கு பயனுள்ளதாக இருக்குமென விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version