சபரிமலை மண்டல பூஜைக்காக, நடை வரும் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு திறப்பட உள்ளது…
சபரிமலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி தலைமையில், வரும் 16ம் தேதி நடை திறந்து தீபம் ஏற்றிய பிறகு கோவிலை வலம் வந்து, 18ம் படி வழி சென்று ஆழிக்குண்டத்தில் தீ வளர்க்கப்படும். இந்த நிலையில், 16ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மீண்டும் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரியால் நடை திறக்கப்பட்டு, தீபம் ஏற்றியதும் மண்டலம் காலம் ஆரம்பமாகும். இதனையடுத்து அனைத்து நாட்களிலும், அதிகாலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரை நெய் அபிஷேகங்கள் தொடர்ந்து நடைபெறும். இந்த நிலையில், பக்தர்கள் வந்து செல்ல முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.