மாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்பட இருப்பதால் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இளம் பெண்களும் செல்லலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கேரளாவில் பதற்றமான சூழல் நிலவியது. ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன. இதனையடுத்து மகர விளக்கு பூஜையின்போது இளம் பெண்களான கனகத்துர்கா, பிந்து ஆகியோர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு சன்னிதானத்திற்குள் நுழைந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர். பதற்றமான சூழலால் பக்தர்களின் வருகை குறைந்ததாக கூறப்பட்டது.

இந்தநிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நாளை மீண்டும் திறக்கப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் 3 எஸ்.பிக்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version