மீண்டும் தொடங்கிய மேட்டுப்பாளையம் – ஊட்டி மலைரயில் சேவை

மண் சரிவால் நிறுத்தி வைக்கபட்டிருந்த மேட்டுப்பாளையம் – உதகமண்டலம் இடையிலான மலை ரயில் போக்குவரத்து 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக கல்லார், ஹில்குரோ, ஆடர்லி போன்ற பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு காணரமாக மலை ரயில் பாதை சேதமடைந்தது.

இதன் காரணமாக மலை ரயில் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக கடந்த நவம்பர் 23ம் தேதி தெற்கு ரயில்வே அறிவித்தது. ரயில்பாதை சீரமைப்பு பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்கு பின் மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

காலை 7 மணியளவில் மேட்டுபாளையம் ரயில் நிலையத்திலிருந்து உதகமண்டலத்திற்கு மலை ரயில் புறப்பட்டது. முன்பதிவு செய்திருந்த 180 சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.

மீண்டும் மலைரயில் சேவை தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Exit mobile version