காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை, சுயநலவாதிகள்தான் எதிர்க்கிறார்கள் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
காஷ்மீர் விவகாரம் குறித்து, செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, 370வது மற்றும் 35ஏ பிரிவிகளால் காஷ்மீர் மக்களின் வளர்ச்சி தடைபட்டிருந்தாக கூறினார். இனி காஷ்மீர் மக்கள் தாங்கள் விரும்பும் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க முடியும் என்று கூறிய பிரதமர் மோடி, காஷ்மீர் மக்களின் வளர்ச்சிக்கு தற்போது ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர், அரசியல் பாகுபாடு இன்றி, இந்திய மக்கள் அனைவரும் காஷ்மீர் முடிவை வரவேற்றுள்ளதாக விளக்கம் அளித்தார். குடும்ப அரசியல் செய்பவர்கள், சுயநலவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் மட்டுமே, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்ப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.