நிஜமாவே "சிங்கிள்" தான் கெத்து

லவ் பண்றவங்க வீட்டுக்கு பயப்படுறாங்களோ இல்லையோ “சிங்கிள்ஸ்”ன்ற வார்த்தையை கேட்டா அப்படி பம்முறாங்க. ஏதோ படிச்சி வாங்குன பட்டம் மாதிரி தன்னோட பேருக்கு பின்னாடி single ன்னு சேர்த்து சொல்ற உலகமா இந்த சமூகம் இருக்கு.

இன்னிக்கு இருக்க இணைய உலகத்துல ” single தான் கெத்து..committed எல்லாம் வெத்து”, “மொரட்டு சிங்கிள்” ன்னு சொல்லிட்டு திரியுற அத்தனை பேருமே ஒரு காலத்துல ஸ்கூல்,டியூசன்ல டீச்சர், ஒண்ணா படிச்ச பொண்ணு மேல ஒண்னுமே புரியாத பாசத்தோடு திரிஞ்சவங்கதான்.இவங்களோட வேண்டுதலோ என்னவோ, எல்லா வருசமும் இந்த காதலர் தினம் வேலை நாட்களில் தான் வருது. அங்க ஆரம்பிக்குது இவங்க சக்ஸஸ்.

லவ் பண்றவங்க கூட லவ்வர்ஸ் டே “டிரெஸ் கோட்” பாலோ பண்ணுவாங்களோ இல்லையோ நம்ம பசங்க கண்டிப்பா பாலோ பண்ணுவாங்க.நம்ம கூடவே இருப்பாங்க…ஆனால் நமக்கே தெரியாம லவ் பண்ணி இன்னிக்கு ” யு டூ ப்ரூட்டஸ்” ன்னு மாறுவாங்க. சோ, மக்களே உஷார். நீங்க அண்டர்கிரவுண்ட் டிடெக்டிவ்வா மாறுற நேரம் வந்துடுச்சி.

 ஆனால் கம்மிட் ஆன எல்லாரும் தன்னோட காதலன்/காதலி கூட ஒரு சண்டைன்னு வர்றப்ப இப்படி லவ் பண்ணாம இருக்குற நம்ம ப்ரண்ட்ஸ்(கண்டிப்பா நம்ம கேங்ல இருப்பாங்க)கிட்ட பேசாம ” சிங்கிள்” ஆகவே இருந்துருக்கலாமோன்னு சொல்ற அந்த நாள், அந்த நொடி உலக சிங்கிள்ஸ் எல்லாம் பெருமைப்பட வேண்டிய தருணம்.

 இப்படியான “single” மக்களும் இந்த காதலர் தினத்தை கொண்டாடலாம். நிஜமாவே இவங்களை மாதிரி லவ் பண்றவங்களை யாரும் பார்த்தது இல்லன்னு சொல்ற அளவுக்கு….

# முதல்ல வீட்டுல இருக்குறவங்க கூட நேரம் செலவழிங்க . ஏன்னா, இவன் என்ன மத்தவங்க மாதிரியா லவ் பண்ணிட்டு அலையுறான்னு உங்களை பத்தி பெருமையா பேசுறேன்னு உங்க சிங்கிள் கதையை சொல்லி உங்களுக்கும் ஒரு லவ் ஸ்டோரி எழுதுவாங்க….( சோ..ப்ளீஸ் நோட்)

# லவ் பண்றவங்க தன்னோட லவ்வர் தனக்குத்தான் முன்னுரிமை கொடுக்கணும்ன்னு நினைப்பாங்க( அது தப்பில்ல). ஆனா நம்ம மக்கள் “யாரும் ஊரே யாவரும் கேளிர்” அப்படிங்குற மாதிரி பாகுபாடு இல்லாம அம்மா, அப்பா, தங்கச்சி. ப்ரெண்ட்ஸ்ன்னு அன்பை பொழியலாம்.

 # லவ் பண்றவங்க விலை கூடுன சாக்லேட்டலாம் வாங்கி கொடுத்து அன்பை பரிமாறுவாங்க. நம்ம மக்களுக்கு 1ரூ சாக்லேட் வாங்கி கொடுத்துப் பாருங்க…அத வாங்கிட்டு இங்க ஒரு கூட்டமே அன்பை கொட்டுவாங்க.

 # உங்களுக்குள்ள ஒரு சிலது மேல அலாதியான காதல் இருக்கும்.(எ.கா. புத்தகம், சினிமா)… உங்களுக்கு பிடிச்ச புக் படிச்சோ ,சினிமா பார்த்தோ, பிடிச்ச இடத்துக்கோ போய் அதோட கொண்டாடலாம்.

# நாள் முழுக்க வீட்டுல சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கலாம். வெளியில போனாத்தானே இந்த லவ்வர்ஸ் நம்ம கண்ணுல மாட்டுவாங்க.நாம கடுப்பாவோம்.

இப்படி எவ்வளவோ விஷயங்கள் நம்ம சுத்தி இருக்கிறப்ப கவலை எதுக்கு….!

இன்னிக்கு கம்மிட் ஆகிட்டு வேலண்டைன்ஸ் டே கொண்டாடுற எல்லாரும் ஒரு காலத்துல சிங்கிள் தாங்கிறத மறந்துறாதீங்க…..!

இப்படியான சிங்கிளான நம்ம மக்களுக்கு லவ் மேலயோ,லவ் பண்றவங்க மேலயோ காண்டு இல்ல…சூழ்நிலையால் இப்படி இருக்க நம்ம “single” மக்களை பாராட்ட வேணாம்…கடுப்பேத்தாதீங்க! ப்ளீஸ்!

Exit mobile version