சாதிய பிடியிலிருந்து இளைஞர்கள் வெளியில் வர துவங்கியிருப்பதால் தான் கலப்பு திருமணம் அதிகரித்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் பகுதியை சேர்ந்த நிவேதிதா, பாலாஜி ஆகியோர் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கலப்பு செய்துக்கொண்டனர். இதனால் அச்சுறுத்தலுக்குள்ளான இருவரும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறையினருக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கலப்பு திருமணம் செய்துக்கொண்ட ஜோடிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டார். அப்போது பேசிய நீதிபதி, கலப்பு திருமணம் மட்டுமே சாதி துவேசத்தை ஒழிக்கும் என்றார். தற்போதைய இளைய தலைமுறையினர் சாதிய முறையிலிருந்து வெளிவந்து கொண்டிருப்பதால்தான் கலப்பு திருமணங்கள் அதிகரித்திருப்பதாக கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த மாற்றங்கள் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்றும் தெரிவித்தார்.