ஊரடங்கு எதிரொலி – ஆன்லைன் மூலமாக பார்சல் சேவை!

ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக, சென்னையில் உள்ள உணவகங்களில் ஆன்லைன் மூலமான பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உணவுகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் ஞாயிறு முழு ஊரடங்கையொட்டி, ஆன்லைன் ஆர்டர் பேரில் பார்சல் சேவைக்கு அனுமதிக்கப்பட்டது. உணவகங்களில் ஸிவிக்கி, சொமேட்டோ ஆகிய ஆன்லைன் செயலிகள் மூலமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் மட்டும் கொண்டு செல்ல ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த சேவைக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் பார்சல் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்களில் உணவு பெற்று செல்லும் ஊழியர்களிடம் விவரங்களைப் பெற்றுக் கொண்டு உணவுகளை வழங்கப்பட்டது.

Exit mobile version