கொரோனா பரவல் எதிரொலியாக சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இறைச்சி கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆன்லைனில் அவற்றுக்கான விற்பனை சூடுபிடித்துள்ளது.
வார இறுதி நாட்களில் இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அசைவ பிரியர்கள் இறைச்சி கடைகளை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
அதேசமயம் ஆன்லைன் மூலமாக நடைபெறும் கறி, மீன் விற்பனையும் அதிகரித்துள்ளது.
கூட்ட நெரிசலில் செல்வதை தவிர்க்கும் வகையில் ஏராளாமான மக்கள் ஆன்லைன் பக்கம் திரும்பியுள்ளனர்.
ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே அவர்களின் வீட்டிற்கே இறைச்சி டெலிவரி செய்யப்படுவதால் ஆன்லைன் இறைச்சி விற்பனை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்