பொறியியல் படிப்பிற்கான பொதுப் பிரிவு ஆன்லைன் கலந்தாய்வு நாளை முதல் நடைபெறுகிறது.
கலந்தாய்வில் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியோ அல்லது தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 46 கலந்தாய்வு உதவி மையங்களுக்குச் சென்றோ பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நான்கு சுற்றுகளாக நடைபெறும் ஆன்லைன் கலந்தாய்வில், முதல் சுற்றில் இடங்களைத் தேர்வு செய்ய நாளை முதல் 10-ஆம் தேதி வரை மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதில் தரவரிசை 1 முதல் 9 ஆயிரத்து 872 வரை உள்ள மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த சுற்று மாணவர்கள் ஜூலை 8 முதல் 10ஆம் தேதிக்குள் இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
முதல் சுற்று மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு விவரம் ஜூலை 11ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், அதை ஜூலை 11,12 ஆகிய இரு தினங்களில் மாணவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஜூலை 28ஆம் தேதி இறுதி ஒதுக்கீடு வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது