தமிழகத்தில் வெங்காயத்தின் விலை படிப்படியாகக் குறைவு

தமிழகத்தில் வெங்காய விலை படிப்படியாகக் குறைந்து, கிலோ 50 ரூபாயில் இருந்து 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் தொடர் மழையால் அறுவடை முற்றிலும் தடைபட்டு வெங்காயத்தின் விலை அதிகரித்து காணப்பட்டது.

கடந்த சில நாட்களில் சுமார் 160-ல் இருந்து 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது வெங்காய விலை குறைந்து, பெரிய ரக வெங்காயம் 50-ல் இருந்து 110 ரூபாயாகவும், சிறிய ரக வெங்காயம் 40-ல் இருந்து 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சாம்பார் வெங்காயம் 80 ரூபாயில் இருந்து 140 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வருகிற காலங்களில் வெங்காயத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version