ஸ்மார்ட் போனுக்கு வெங்காயம் இலவசம் – பட்டுக்கோட்டையில் அதிரடி ஆஃபர்

பட்டுக்கோட்டையில் ஸ்மார்ட் போன் வாங்கினால் வெங்காயம் இலவசமாக தருவதாக மொபைல் கடை உரிமையாளர் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் இதனை கலாய்த்து மீம்ஸ்கள், டிக்டாக் வீடியோக்கள் என சமூக வலைத்தளங்களில் வெங்காயம் தான் ட்ரெண்டிங்காக உள்ளது. கடைகளில் வெங்காயம் திருட்டு, வெங்காயத்தை பாதுகாக்க “gun man” தேவை போன்ற செய்திகளும் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள STR என்ற மொபைல் கடை ஒன்றில் வித்தியாசமான விளம்பரம் ஒன்று கடையின் வாசலில் வைக்கப்பட்டது. அதில் அந்த மொபைல் கடையில் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு 1 கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த விளம்பர போட்டோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version