அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்க ஓஎன்ஜிசி நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு அனுமதி கேட்டிருப்பது மாவட்ட மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாட்டில், கடந்த ஐந்தாண்டு கால அதிமுக ஆட்சியில், டெல்டா மாவட்ட விவசாயத்தை பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கவில்லை.
மேலும், அதிமுக ஆட்சியில் காவிரி டெல்டா மாவட்டங்ள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்பட்டன.
இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை மாதங்களே ஆன நிலையில், அரியலூர் மாவட்டத்தில் புதுக்குடி, செங்குந்தபுரம், தேவனூர் உள்ளிட்ட 10 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்க ஓஎன்ஜிசி நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு அனுமதி கேட்டுள்ளது.
இந்த விவகாரம் அரியலூர் மாவட்ட டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது என டெல்டா விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடைமுறைகளை தற்போதைய திமுக அரசு பின்பற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.