பல ஆண்களை காதல் வலையில் விழவைத்து, அடுத்தடுத்து நான்கு திருமணங்கள் செய்து, கணவர்களை கொடுமைப்படுத்திய பெண் தலைமை காவலர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமை காவலராக பணியாற்றும் சந்தியா ராணி என்பவர், நான்காவதாக தன்னை திருமணம் செய்து கொண்டு கொடுமைப்படுத்துகிறார் என்று, சரண் தேஜ் என்பவர் வாட்ஸ்அப் மூலம், ஹைதராபாத் நகர காவல் ஆணையருக்கு புகார் அளித்ததன் வாயிலாக வெளியே வந்தது, மோசக்காரியான சந்தியா ராணியின் சுயரூபம்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், ஆயுதப்படை பிரிவில் தலைமை காவலராக பணியாற்றுபவர், 30 வயதான சந்தியா ராணி. நான்காவது கணவர் சரண் தேஜ் என்பவர் கொடுத்த பூகரின் அடிப்படையில், சந்தியா ராணியை பிடித்து விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.
காவல்துறையில் பணிபுரியும் சந்தியா ராணி, பிடித்தவர்களை காதல் வலையில் வீழ்த்தி, தனக்கு தானே கால் கட்டுபோட்டு கொள்வது தான் வாடிக்கை.
அப்படி, இதுவரை மூன்று பேரை திருமணம் செய்த ராணிக்கு, நான்காவதாக ஒரு ராஜா தேவைப்பட்டுள்ளார்.
ஏற்கணவே திருமணம் செய்தவர்களில் இரண்டு பேர், ஆளை விட்டால் போதும் என்று விவாகரத்து வாங்க, ஒருவர் சந்தியாவின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
தன் வாழ்வில் இத்தனை தரமான சம்பவங்கள் நடந்தும், திருந்தாத காதல் ராணி, வேலை தேடி ஹைதராபாத்துக்கு வந்த சரண் தேஜ் என்பவரை, நான்காவதாக திருமணம் செய்துள்ளார்.
திருமணத்திற்கு பின் தன்னுடைய சுயரூபத்தை காட்டத் தொடங்கிய சந்தியா ராணி, நீ வேலையை விட்டு விட்டு, நான் சொல்லும் வேலையை செய்ய வேண்டும் என்று கூறி, வீட்டில் அடைத்துவைத்து, காலாலேயே மிதித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
அடி தாங்க முடியாத சரண் தேஜ், வாட்ஸ்அப் வாயிலாக, ஹைதராபாத் நகர காவல் ஆணையருக்கு புகார் அளித்தார்.
இதையடுத்து, சரண் தேஜை மீட்ட போலீசார், சந்தியா ராணி மீது வழக்கு பதிவு செய்து, வேறு யாரேனும் இதுபோல் அவரிடம் சிக்கியுள்ளார்களா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.