இந்தியாவின் மின் வாகனங்களுக்கான தேவையை உணர்ந்து உள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள், அவர்களின் புத்தம் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்துவருகின்றனர்.
இந்நிலையில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த Icona வடிவமைப்பு குழுமம், அதன் அதிக தூரம் செல்லும் மின்சார வாகனத்தை விரைவில் களமிறக்க இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த காரின் அறிமுகத்திற்கு முன்னதாக அதன் Concept மாடலை அடுத்த மாதம் நடைபெறவுள்ள வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்த அது திட்டமிட்டிருக்கின்றது.
எதிர்கால தொழில்நுட்பத்தை உள்ளடக்கியுள்ள இந்த கார் தானாக Drive செய்யும் அம்சத்தைப் பெற்றிருக்கின்றது. அதுமட்டுமின்றி ஒரு முழுமையான சார்ஜில் 1,200 கிமீ தூரம் வரை செல்லும் என கூறப்படுகின்றது.
Icona nucleus என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார் 2020 ஆட்டோ எக்ஸ்போவை அடுத்து விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகின்றது.