சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா

நாட்டின் 73வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையை அடுத்த அம்பத்தூரில் கிரீன் கலாம் மற்றும் அம்பத்தூர் நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் துவக்கமாக காமராஜர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியிலும், ஒரகடம் பகுதியில் அமைந்துள்ள தாமரை குளம் பகுதியிலும் மரக்கன்றுகளை நடும் பணியை நடிகர் விவேக் துவக்கி வைத்து, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், நீர் நிலைகளை பாதுகாக்க, பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், அம்பத்தூர் பகுதியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version