காவலன் செயலியை ஐந்து நாட்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பதிவிறக்கம்-ஏ.கே.விஸ்வநாதன்

காவலன் செயலியை ஐந்து நாட்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பதிவிறக்கம்- சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

பெண்கள் மற்றும் முதியோர் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை சார்பில் காவலன் என்கின்ற செயலி கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது ஆனால் போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் மிக குறைந்த அளவிலேயே இந்த  செயலியை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து இருந்தார்கள் தற்போது இந்த காவலன் செயலியின் முக்கியத்துவம் குறித்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காவல்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ கே விஸ்வநாதன் காவலன் செயலியை ஐந்து நாட்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக தெரிவித்தார் அதேநேரத்தில் தேசிய குற்ற ஆவண காப்பகம் மற்றும் இந்தியா டுடே கருத்துக் கணிப்பின்படி தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் குறைவு என்று கூறப்பட்டாலும் குற்றம் இல்லாத நகரமாக சென்னையை மாற்ற முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார் மேலும் இந்த காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து அனைவரும் பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Exit mobile version