காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே மர்மப் பொருள் வெடித்ததில் ஒருவர் பலியான நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருப்போரூர் அடுத்த மானாம்பதி கங்கையம்மன் கோவில் பின்புறம் மர்ம பொருள் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்தது. அப்போது அங்கே அமர்ந்திருந்த 5 இளைஞர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து கயமடைந்த இளைஞர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் சூர்யா என்ற இளைஞர் பலியான நிலையில், திலீப் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வெடி விபத்து குறித்து காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.