"ஒரு டோஸ் தடுப்பூசி கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக பாதுகாக்காது"

ஒரு டோஸ் மட்டும் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் கொரோனா தொற்று பாதிப்பை முழுமையாக தவிற்க முடியாது என்று ஆய்வு ஒன்றின் முடிவில் தெரியவந்துள்ளது.

டெல்லியை சார்ந்த தனியார் மருத்துவமனை குழு, 4 ஆயிரத்து 296 சுகாதார பணியாளார்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. அதில் 2 ஆயிரத்து 716 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸும், 623 பேர் ஒரு டோஸும் எடுத்துகொண்டவர்கள். இந்நிலையில் மார்ச் முதல் மே மாத காலக்கட்டத்தில், இவர்களில் 526 பேர் கொரோனா தொற்றுக்கு மீண்டும் உள்ளானது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் 82 சதவீதம் பேருக்கு லேசான அறிகுறிகளும், 5 சதவீதம் பேருக்கு தீவிர பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தடுப்பூசியின் ஒற்றை டோஸ் பாதுகாப்பானது இல்லை என்பது ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துகொண்டவர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டாலும், உயிரிழப்புகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு, பல்வேறு அமைப்புகள் வெளியிட்ட ஆய்வு முடிவுகளில் இருந்து மாற்றாக இருப்பதாகவும் தனியார் மருத்துவமனை குழு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version