ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் : பாண்ட்யாவுக்கு பதிலாக விஜய் சங்கர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட ஹர்தீக் பாண்ட்யாவுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த நிலையில், டி.வி. நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கிரிக்கெட் வீரர் ஹர்தீக் பாண்ட்யா பெண்கள் குறித்து விமர்சனத்திற்குறிய கருத்துக்களை பதிவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இதனால், இந்திய கிரிக்கெட் வாரியம் ஹர்தீக் பாண்ட்யாவை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது. இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட ஹர்தீக் பாண்ட்யாவுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கே.எல். ராகுலுக்கு பதிலாக பஞ்சாப்பை சேர்ந்த சுப்மேன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version