ஒன்றரை வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை

வேலூரில் ஒன்றரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்

வேலூர் மாவட்டம், நேதாஜி நகரைச் சேர்ந்த நளினி மற்றும் அவரது கணவர் சசிகுமார் இருவரும் பெங்களூரில் கட்டிடத் கூலி வேலைசெய்து வந்தனர். அப்போது, முரளி என்பவருடன் நளினிக்கு காதல் ஏற்பட்டது. இதற்கு சசிகுமார் எதிர்ப்பு தெரிவித்ததால், தனி வீடு எடுத்து தனது ஒன்றரை வயது பெண் குழந்தை மற்றும் முரளியோடு நளினி வசித்து வந்தார். இதனிடையே கடைக்கு சென்றிருந்த நளினி வீடு திரும்பியபோது, குழந்தை ரத்த காயங்களுடன் மயங்கி இருந்தது. உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக இறந்துபோனதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக நளினி அளித்த புகாரின்பேரில் முரளியை கைது செய்த வாணியம்பாடி போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version