இரண்டாம் கட்டமாக ஒன்றரை லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று இந்தியா வருகை

ரஷ்ய நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஏப்ரல் 12ம் தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, கடந்த 1ம் தேதி ரஷ்யாவிலிருந்து முதற்கட்டமாக ஒன்றரை லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்த நிலையில், 2ம் கட்டமாக மேலும் ஒன்றரை லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று இந்தியா வருகிறது. ஹைதராபாத் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்படும் தடுப்பூசிகளை டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் பெறுகிறது. இதனிடையே, ஸ்புட்னிக்-வி தடுப்பூசி அடுத்த வாரம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் முதல் ரெட்டீஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலேயே ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிக்கப்படும் என்றும், மொத்தமாக 15 கோடியே 60 லட்சம் டோசுகள் உற்பத்தி செய்யப்படும் என்றும் நிதி ஆயோக்கின் உறுப்பினர் வி.கே.பால் கூறியுள்ளார்.

Exit mobile version