நாடு முழுவதும் கேரள மக்கள் கோலாகலமாக கொண்டாடும் ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகையையொட்டி கோவை சித்தாப்புதூர் ஐயப்பன் கோயிலில், மலையாள மொழி பேசும் மக்கள், தங்கள் குடும்பத்தினருடன் கோயில் நுழைவாயில் முன்பு சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

ஆடி மாதம் அஸ்த்த நட்சத்திரத்தில் துவங்கி ஆவணி திருவோண நட்சத்திரம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, மலையாள மக்களால் வெகு சிறப்பாக கொண்டாடபடுவது வழக்கம். கடைசி நாளான திருவோண நட்சத்திரத்தின் போது மாவேலி மன்னரை வரவேற்க வீடுகளின் முன்பு அத்தப்பூ கோலமிட்டு வரவேற்பர். அன்றைய தினம் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுவது உண்டு. இதனடிப்படையில், கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில், நிர்வாகம் சார்பாக அத்தப்பூ கோலிமிட்டு சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ தினங்களில் கோயில்களில் வழிபாடு செய்ய அரசு தடைவிதித்து உள்ளதையடுத்து, கோயில் நுழைவாயில் முன்பு நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனடிப்படையில், மக்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து சென்றனர். அப்போது பாதுகாப்புகான இடைவெளி கேள்விகுறியானதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

https://www.youtube.com/watch?v=pglhM-uoPz8

பாரம்பரிய பண்டிகையாம் ஓணம் பண்டிகையை நாடு முழுவதும் கேரள மக்கள் இன்று கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

அறுவடை திருவிழாவான ஓணம் பண்டிகை கேரளாவில் 10 நாட்களாக கொண்டாடப்படுகிறது. கடந்த 14ம் தேதி தொடங்கிய 10 நாள் விழா வரும் 23ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஓணம் பண்டிகையின் முக்கிய நாளான திருவோணத்தையொட்டி, வீடுகளில் அத்திப்பூ கோலமிட்டு சதய விருந்து படைத்து கேரள மக்கள் ஓணத்தை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி திருக்கோயிலுக்கு புத்தாடை அணிந்து வந்து குடும்பத்துடன் வழிபாடு நடத்தினர். அப்போது, அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி பாதுகாப்பான இடைவெளியுடன் மக்கள் வழிபட்டனர்.

தமிழகம்- கேரளா எல்லை பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையிலேயே மலையாள மக்கள் குளித்துவிட்டு, புத்தாடைகள் அணிந்து அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று இறைவனை தரிசித்து வருகின்றனர். புதுக்கடை பகுதியில் அமைந்துள்ள பார்த்தசாரதி கோயில் வளாகத்தில் பக்தர்கள் அத்திப்பூ கோலம், ரங்கோலி கோலம் உள்ளிட்டவை இட்டு மகிழ்ந்து கொண்டாடி வருகின்றனர்.

 

நாகர்கோவிலில் அமைந்துள்ள பால மந்திர் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் இன்று ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. புத்தாடைகள் அணிந்து இனிப்புகளுடன் அத்திப்பூ கோலமிட்டு ஊஞ்சல் ஆடி நடைபெற்ற இந்த ஓணம் விழாவில், குழந்தைகளுடன் அந்த பகுதியை சேர்ந்த பெண்களும் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தனர்.

https://www.youtube.com/watch?v=4Rk3VGRPoUs

 

Exit mobile version