காதலர் தினத்தில் காதலர்களை மகிழ்விக்க வரும் " ஒரு அடார் லவ்"

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் “ஒரு அடார் லவ்”. படத்தின் பெயர் நியாபகம் வருகிறதோ இல்லையோ அதில் நடித்த நடிகை பிரியா வாரியரை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம் . படத்தின் “மாணிக்கிய மலரேயா” பாடலின் நடுவே வரும் அந்த ஒற்றை கண் சிமிட்டலுக்காக உலகமே வயது வித்தியாசமில்லாமல் கிறங்கியது .ஒரே இரவில் உலகமே தேடும் அளவில் ட்ரெண்டிங் ஆனார் பிரியா வாரியர். அந்த பாடல் காட்சிகளும் இதுநாள் வரை வாட்ஸ் அப்-ல் வந்துக்கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட நபர்களில் பிரியா வாரியருக்கும் தனிஇடம் உண்டு.

ஆனால் விஷயம் அதுவில்லை. ஏற்கனவே கன்னடம் மற்றும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒரு அடார் லவ் படம் தற்சமயம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

Exit mobile version