மக்களவைத் தேர்தல் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக இந்திய தேர்தல் ஆணையம் சமூக வலைதளமான டிவிட்டரில் இணைந்துள்ளது
தேர்தல் தொடர்பான புகார்களுக்காக, ஏற்கனவே இ விஜில் என்ற செயலியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த செயலிக்கு இதுவரை ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதேபோன்று விதிமீறல் தொடர்பான புகார்களை உடனுக்குடன் தெரிவிப்பதற்காக 1950 என்ற தொலைபேசி எண்ணும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தேர்தல் ஆணையம் டிவிட்டர் கணக்கை தொடங்கியுள்ளது. மக்களவைத் தேர்தல் செய்திகள் உடனுக்குடன் பொதுமக்களுக்கு சென்று சேரும் வகையில் டிவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.