வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் எதிர், எதிரே வந்த ரயில்கள் சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஜோலார் பேட்டையில் இருந்து அரக்கோணம் நோக்கி மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. காட்பாடி ரயில் நிலையம் அருகே வந்த போது வேலூரில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் ரயில் எதிரே வருவது தெரியவந்தது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ரயில் ஓட்டுநர்கள், சாமர்த்தியமாக ரயிலை பாதியில் நிறுத்தினர். 100 மீட்டர் தூரத்தில் இரண்டு ரயில்களும் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.