சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சியை சேர்ந்த அசோக்குமார் என்பவர் குடும்பத்துடன் மகாராஷ்டிராவில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். சாமி தரிசனம் செய்து விட்டு அவர்கள் நேற்று ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே சாலையோரம் நின்றிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் கார் பயங்கரமாக மோதியது. இதில், காரில் பயணம் செய்த குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version