காஷ்மீர் பிரச்னை குறித்த காங்கிரஸ் மக்களவைத் தலைவர் பேச்சுக்கு கடும் கண்டனம்

ஜம்மு காஷ்மீர் பிரச்னை உள்நாட்டுப் பிரச்சனையல்ல, சர்வதேச பிரச்சனை என்று பேசிய காங்கிரஸ் மக்களவைத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு அந்த கட்சியின் மற்ற தலைவர்களே கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகார சட்டம் ரத்து குறித்து பேசிய அவர், சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் ஒப்பந்தம் குறித்து கேள்வியெழுப்பினார். மேலும் ஐ.நா சபை காஷ்மீர் விவகாரத்தை கண்காணித்து வருவதாக குறிப்பிட்டார். அவருடைய இந்தப் பேச்சுக்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்த முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். காஷ்மீர் விவகாரத்தில், மக்களவையில் எவ்வாறு விவாதிக்க வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்த காங்கிரஸ் உறுப்பினர்களின் சந்திப்புக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

Exit mobile version