சிபிஐ அதிகாரிகளை மேற்கு வங்க போலீசார் தடுத்து நிறுத்திய விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாட போவதாக சிபிஐயின் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் தெரிவித்துள்ளார்.
சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சி.பி.ஐ அதிகாரிகள் சென்றனர். அங்கு, சி.பி.ஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சி.பி.ஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். சிபிஐக்கு எதிராக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த முடியாமல் மேற்கு வங்க அரசு மற்றும் போலீசார் தடுப்பதாக உச்சநீதிமன்றத்தை நாட சிபிஐ முடிவு செய்துள்ளது என சிபிஐயின் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் தெரிவித்துள்ளார்.