கடல் அரிப்புக்கு உள்ளாகும் தீவுகள் குறித்து ஆய்வு செய்யும் தீவுப் பாதுகாப்பு சிறப்புக்குழு

மன்னார் வளைகுடா பகுதியில் கடல் அரிப்புக்கு உள்ளாகும் தீவுகள் குறித்து ஆய்வு செய்ய, தீவுப் பாதுகாப்பு சிறப்புக்குழு இன்று ஆய்வில் ஈடுபட உள்ளது.

நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரையிலான மன்னார்வளைகுடா கடல் பகுதியில் 17 தீவுகள் ராமநாதபுரம் கடல்பகுதிக்கு அருகிலும், 4 தீவுகள் தூத்துக்குடி கடல் பகுதியிலும் உள்ளன. இப்பகுதியில் அரிய வகை 4 ஆயிரத்து 223 உயிரினங்கள் இருப்பதாகவும், உலக வெப்பமயமாதல் மற்றும் இரட்டை மடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் போன்ற காரணங்களால், அவை பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதேபோன்று தூத்துக்குடி அருகே இருந்த வான் தீவானது 16 ஹெக்டர் பரப்பிலிருந்து சுமார் 1.5 ஹெக்டராக சுருங்கியது. இந்நிலையில் தீவுகள் கடந்த 40 ஆண்டுகளில் மாற்றம் அடைந்திருக்கின்றனவா என்பதை அறிய ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, சிறப்புக் குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே வான் தீவுப்பகுதியில் பருவநிலை மாற்றம் குறித்து சிறப்புக்குழு இன்று ஆய்வில் ஈடுபட உள்ளது.

Exit mobile version