28ஆம் நாளில் இளம் நீலநிற பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்

காஞ்சிபுரம் புகழ்பெற்ற அத்திவரதர் உற்சவத்தின் 28ஆம் நாளில், அத்திவரதர் இளம்நீல நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், அத்திவரதர் வைபவம் கடந்த 27 நாட்களாக வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஏறத்தாழ 36 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில், 28 ஆம் நாளில் அத்திவரதர் இளம் நீல நிற பட்டாடை உடுத்தி, பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஏகாதசி மற்றும் விடுமுறை நாளை முன்னிட்டு அத்தி வரதரரைக்கான இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version