காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் அத்தி வரதர் உற்சவத்தின் 17ஆம் நாளான இன்று மாம்பழ நிற பட்டாடையில் அத்தி வரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வரதராஜ பெருமாள் திருக்கோயிலின் அனந்தசரஸ் குளத்தில் வீற்றிருக்கும் அத்திவரதரை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து 48 நாட்கள் பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கப்படுவது வழக்கம். அதன்படி வெளியே எடுக்கப்பட்ட அத்தி வரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
17ஆம் நாளான இன்று அத்தி வரதர் மாம்பழ நிற பட்டையில், பஞ்சவர்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். இதுவரை 19 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரிப்பதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகிறது.