பொங்கல் விடுமுறையில் மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை -அமைச்சர் செங்கோட்டையன்

பொங்கல் விடுமுறையில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியைக் காண மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரத் தேவையில்லை எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி மாதம் 16ஆம் தேதி பள்ளி மாணவர்களுடன்
டெல்லியில் கலந்துரையாடும் பரீக்சா பி சர்ச்சா எனும் நிகழ்ச்சி தூர்தர்ஷன்,
அகில இந்திய வானொலி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பிரத்தியேக யூடியூப் ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதனை ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பார்ப்பதற்கான வசதிகளைச் செய்ய வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், பொங்கல் விடுமுறையில் பிரதமரின் நிகழ்ச்சியைப் பள்ளிகளில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்படுவதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இதுபற்றி விளக்கம் அளித்துள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஜனவரி 16ஆம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை எனவும், மாணவர்கள் வீட்டில் இருந்தே பிரதமரின் நிகழ்ச்சியைப் பார்க்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார். மேலும் விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார். 

Exit mobile version